உளுந்தூர்பேட்டையில் பயனற்ற மின்மாற்றி கம்பங்கள்
2021-12-07@ 19:02:06

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள நியாயவிலை கடை எதிரில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்ட சாலையில் கடந்த 3 வருடத்திற்கு முன்னர் மின்வாரியத்தின் மூலம் மின்மாற்றி வைக்கப்பட்டது. இதற்கு அப்போது இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்ட சாலையில் மின்மாற்றி வைத்தால் எப்படி செல்வது என மின்மாற்றி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், கம்பங்கள் மட்டும் நடப்பட்டு மின்மாற்றி வைக்கப்படாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இருவரையில் மின்மாற்றி வைக்கப்படாமல் பயனற்ற நிலையில் உள்ள மின்மாற்றிக்காக அமைக்கப்பட்ட மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வருவாய்துறையின் சார்பில் உரிய அளவீடுகள் செய்து பொதுமக்கள் செல்லும் வழியில் உள்ள முள்செடிகளை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!