வீட்டிலேயே பிரசவம்: தாய், குழந்தை பலி
2021-12-07@ 17:54:50

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார். இவரது மனைவி செல்வராணி(36). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். இந்தநிலையில் செல்வராணி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான செல்வராணிக்கு கடந்த 4ம் தேதி இரவு வீட்டில் இருக்கும்போது பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்து பெண்கள் உதவியுடன் வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. பின்னர் திடீரென செல்வராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரையும், குழந்தையையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே செல்வராணியும், குழந்தையும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து உறவினர்கள் இருவரது உடலையும் வீட்டிற்குக் கொண்டு வந்தனர். தகவலறிந்த மங்களமேடு போலீசார் அனுக்கூர் கிராமத்திற்குச் சென்று செல்வராணி மற்றம் குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!