டிடிவி. தினகரனை கைது செய்ய கோரி அதிமுகவினர் சாலை மறியல்
2021-12-07@ 00:06:28

பெரம்பூர்: ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் சென்றனர். அங்கு, அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அமமுக தொண்டர்கள் ஒன்று சேர்ந்து ஓபிஎஸ் கார் மீது செருப்பை வீசினர். எடப்பாடி பழனிசாமியின் காரை மறித்து தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் காரை வழிமறித்து அமமுகவினர் தகராறில் ஈடுபட்டதை கண்டித்து, நேற்று மாலை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவிக நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அமமுக தொண்டர்களை கட்டவிழ்த்து விட்டு வன்முறையில் ஈடுபடும் டிடிவி தினகரனை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமைச்செயலக காலனி குடியிருப்பு போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த வகையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதே இலக்கு: தொழில்முனைவோர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!