உள்ளாட்சி தேர்தல் பணியின்போது மரணமடைந்த ஆசிரியர் குடும்பத்துக்கு நிதியுதவி
2021-12-07@ 00:02:30

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் நெய் குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் கே.ஹரி (47). கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இதையொட்டி ஹரி, தாங்கி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் பணிக்கு சென்றார். அப்போது, ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தால் ஹரி, திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு ஹரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் மற்றும் வாலாஜாபாத் வட்டார ஆசிரியர்கள் இணைந்து ரூ.5 லட்சம் நிவாரண நிதியை, அவரது மனைவி நளினியிடம் வழங்கினர். அப்போது, மாவட்ட செயலாளர் ரமேஷ், வாலாஜாபாத் வட்டார தலைவர் காமாட்சி, வட்டார பொருளாளர் மோகனசுந்தரம் உள்பட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர். மேலும் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக பணி வழங்க தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்