உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 3000 பேருக்கு நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்
2021-12-07@ 00:02:23

பொன்னேரி: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தடப்பெரும்பாக்கம், வன்னிப்பாக்கம், நாலூர், வெள்ளிவாயல்சாவடி, திருவெள்ளைவாயல், பஜார், தேவதானம், வல்லூர் ஆகிய ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், கதிரவன், ஆனந்தகுமார், தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தன்சிங், தமிழரசன், ராஜா, முனுசாமி, கஸ்தூரி தசரதன், சக்திவேல், ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன், துணை அமைப்பாளர்கள் சூரியராஜ், கிரிதரன், மாணவரணி விக்னேஷ் உதயன், கலைவாணன், தகவல் தொழில்நுட்ப அணி லோகநாதன், முரளி, மணி, சங்கர், மோகனசுந்தர், வடசென்னை அனல்மின் நிலைய திட்ட செயலாளர் ராமமூர்த்தி, பாபு, கோபி, முருகன், கார்த்திக், தமிழ்குடிமகன், பொன்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:
Udayanithi Stalin 3000 people welfare assistance DJ Govindarajan MLA உதயநிதி ஸ்டாலின் 3000 பேருக்கு நலத்திட்ட உதவி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏமேலும் செய்திகள்
படூரில் தமிழக அரசின் வாழ்ந்துகாட்டுவோம் திட்ட செயல்பாடுகள் ஆய்வு
பண்ருட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
தண்ணீர் பந்தல் திறப்பு விழா
புள்ளிமான் மர்ம சாவு
6 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி கிராமங்களில் விவசாயிகள் பைக் பிரசாரம்
ஆவடி அருகே ரூ.5.71 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள்: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்