தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 719 பேருக்கு கொரோனா; 29 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை அறிக்கை..!
2021-12-06@ 19:54:32

சென்னை: தமிழகத்தில் மேலும் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,31,235 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
* தமிழகத்தில் மேலும் 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,31,235ஆக அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 737 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,86,683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,529 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 03 பேரும், அரசு மருத்துவமனையில் 07 பேரும் உயிரிழந்துள்ளனர்.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 128 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 558757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை 5,48,85,228 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,01,255 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 8,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 15,94,201 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 429 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 11,36,996 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 290 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 315 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 246.
மேலும் செய்திகள்
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: திருநெல்வேலி வாலிபர் கைது
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 நகராட்சி ஆணையர்கள் இட மாற்றம்
திரைப்படங்களில் சண்டை காட்சிகள் வரும்போது ஆயுதங்கள், ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்
தமிழகத்தில் 16 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!