SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 நாட்கள் தொடர்ந்து மாடல் அழகி பலாத்காரம்

2021-12-06@ 17:47:44

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி. இவர் விளம்பரத்திற்கு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஆலப்புழாவை சேர்ந்த சலீம்குமார்(33) என்பவரை அணுகியுள்ளார். அவர் கொச்சியில் இடத்திரா பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்து போட்டோ ஷூட் எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 1ம் தேதி மாடல் அழகியை அழைத்து கொண்டு லாட்ஜிக்கு சென்றார். அங்கு சலீம்குமார் அவருக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

இதை தெரியாமல் குடித்த மாடல் அழகி மயங்கி விட்டார். இதையடுத்து சலீம்குமார் அவரது நண்பர்கள் ஷமீர், அஜ்மல் ஆகியோர் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து 3 நாட்கள் வைத்து சீரழித்துள்ளனர். பின்னர் மாடல் அழகியை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அவர் இதுகுறித்து கொச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம்குமாரை கைது செய்தனர். ஷமீர், அஜ்மல் மற்றும் லாட்ஜ் உரிமையாளரான பெண் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்