இந்திய- ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார். 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!!
2021-12-06@ 10:58:36

டெல்லி : ஒரு நாள் பயணமாக இன்று பிற்பகலில் டெல்லி வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ரஷியா உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோவில் இருந்து டெல்லி வரும் புதின், விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்திற்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடி அவரை வரவேற்கிறார். அதன்பின்னர் 2 தலைவர்களும் தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து மோடியும் புதினும் தனியாக சந்தித்து பேசுகின்றனர்.
உச்சி மாநாட்டின் முடிவில் 2 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மோடி, புதின் சந்திப்பிற்கு முன்னதாக 2 நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. அதில் 2 தரப்பு உறவு, மண்டல சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.
Tags:
ரஷிய அதிபர் விளாடிமிர்மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியது!!
இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மாஜி பிரதமர் மகிந்தாவிடம் போலீஸ் விசாரணை: எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு
சீனாவின் ஆதிக்கம், செல்வாக்கை ஒடுக்க ‘ஆசியாவுக்கு ஒரு நேட்டோ’ அமெரிக்காவின் பலே ராஜதந்திரம் இந்தியாவை வைத்து நடக்கும் நாடகம்
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் எதிரொலி மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை
இலங்கையில் பணவீக்கம் 35 சதவீதத்தை எட்டியது; ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அச்சிட முடிவு.! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தகவல்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!