இந்தியாவிலும் கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? : தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு இன்று முக்கிய ஆலோசனை
2021-12-06@ 09:16:29

டெல்லி : அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக வல்லுநர் குழு இன்று கலந்து ஆலோசிக்கிறது. ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து உலகின் பல்வேறு நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு எடுத்துள்ளன. இந்தியாவிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பரிசீலிக்க வேண்டும் என சார்ஸ் கொரோனா மரபியல் ஆய்வாளர்கள் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதே போல தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று மீண்டும் டெல்லியில் கூடி இது குறித்து ஆலோசனை செய்கிறது. அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு பதிலாக தேவைப்படுவோருக்கு மட்டும் செலுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
Tags:
பூஸ்டர் டோஸ்மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு
சிபிஐ அதிகாரிகளை தடுத்த கட்சி தொண்டர்களுக்கு பளார் விட்ட ரப்ரிதேவி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்