கடம்பத்தூர் - சென்ட்ரல் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்
2021-12-06@ 05:37:51

திருவள்ளூர்: நெரிசல் நேரங்களில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடம்பத்தூரில் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். சங்க செயலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். துணை தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். கூட்டத்தில், கடம்பத்தூர் ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும். ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து பயணிகள் இறங்கி ரயில் நிலையம் செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும்.
ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் ரிட்டர்ன் டிக்கெட் வழங்க வேண்டும். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் குறைந்தபட்ச கட்டணம் ₹10 ஆக இருப்பதை ₹5 ஆக குறைக்க வேண்டும். நெரிசல் நேரங்களில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
வடக்கிபாளையம் பிரிவு மேம்பால பக்கவாட்டு சுவரில் தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ஊழல் தலை விரித்தாடுகிறது: திட்டங்களை தட்டிப்பறிப்பதாக விவசாயிகள் வேதனை
தொடர் மழை எதிரொலி; ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: பொக்லைன் கொண்டு அகற்றம்
அந்தரத்தில் மிதந்தபடியே ஏரியின் எழிலை ரசிக்கலாம்: கொடைக்கானலில் ஜிப் லைன் சுற்றுலா அறிமுகம்
கீழடியில் இரும்பு துண்டுகள் உருக்கு கழிவுகள் கண்டெடுப்பு
இயற்கை எரிவாயு இணைப்புக்கு சேலத்தில் குழாய் பதிப்பு தீவிரம்: விரைவில் வீடுகளுக்கு வழங்க முடிவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்