கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுக்கள் கலைப்பா?..அமைச்சர் கே.என்.நேரு பதில்
2021-12-06@ 01:16:53

சேலம்: சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ஒரேநாளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என கருதுகிறேன். விரைவில் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. தேர்தலை தைரியமாக சந்தித்து 100 சதவீத வெற்றியை வசப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை கலைப்பது பற்றி உடனடியாக எதுவும் செய்ய இயலாது.
நான் 1996-2001ம் ஆண்டில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது இருந்த சட்ட திட்டங்கள் வேறு. இப்போது இருக்கும் சட்ட திட்டங்கள் வேறு. தற்போது ஆட்சி மாறினாலும், உடனடியாக கூட்டுறவு சங்கங்களை கலைக்க முடியாமல் போனதற்கு காரணம் அது தான். அதேமாதிரி அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. அதனால், சட்ட திட்டங்களை ஆராய்ந்து கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை கலைக்க விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
மேலும் செய்திகள்
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!