உ.பி-யில் பாஜகவுக்கு கங்கனா பிரசாரம்?
2021-12-05@ 21:36:57

மதுரா: சர்ச்சை கருத்துகளை அவ்வப்போது பேசிவரும் பாலிவுட் நடிகை கங்கனா, கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகருக்கு காரில் சென்ற போது அவரை பஞ்சாப்பை சேர்ந்த சில விவசாய அமைப்புகள் தடுத்தி நிறுத்தி கோஷங்கள் எழுப்பின. சீக்கியர்களுக்கு எதிராகவும், விவசாய போராட்டங்களை கொச்சைபடுத்தியதற்காவும் அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமியை தரிசிப்பதற்காக கங்கனா வந்தார். கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த கங்கனாவிடம், ‘உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்கும் பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்காக பிரசாரம் செய்வீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கங்கனா, ‘நான் எந்த கட்சியையும் சேர்ந்தவள் அல்ல; தேசத்தின் நலனுக்காக சிந்திக்கும் தேசியவாதிகளின் பக்கம் நிற்பேன்.
நான் கூறும் கருத்துகளை நேர்மையானவர்கள், துணிச்சலானவர்கள், ேதசியவாதிகள், நாட்டின் நலன்கருதி பேசுபவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறேன். சண்டிகரில் எனது காரை மறித்த விவகாரத்தில், எனது எதிர்ப்பை தெரிவித்தேன்’ என்றார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு
சிபிஐ அதிகாரிகளை தடுத்த கட்சி தொண்டர்களுக்கு பளார் விட்ட ரப்ரிதேவி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்