போதிய பணியாளர்கள் இல்லாததால் நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கம்: ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
2021-12-05@ 14:23:16

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் கணினி மையம், நீதிமன்ற அலுவலர் உறைவிடம் திறப்பு விழா மற்றும் சட்ட நாள் கொண்டாட்டம் ஆகியவை நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், ‘நீதித்துறையின் கட்டமைப்புகளும், நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளன. இதை அரசு சரி செய்யும் என நம்புகிறோம். தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளன. அதனுடன் நாமும் பயணிக்க வேண்டும். மதுரை ஐகோர்ட் கிளை சிறப்பாக செயல்படுகிறது’ என்றார். கணினி மையத்தை திறந்து வைத்து உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘கடந்த 2005ல் மத்திய அரசு நீதித்துறையில் தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது. 2013ல் நீமன்றத்தில் இணைய வழி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 2015லும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்போதும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
1949 நவ.26ல் சட்ட நாளாக அறிவிக்கப்பட்டு தற்போது வரை 72 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், 150 சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர் நாத் பண்டாரி பேசும்போது, ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுரை 1 கோடி ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் 24 கோடி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. இதற்காகவே மதுரைக் கிளையில் கணினி மையம் திறக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கு நீதிமன்றங்கள் காரணமல்ல. நீதிமன்றங்களில் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால் வழக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேவையான ஊழியர்கள், நீதிபதிகள் நியமிக்கப்படும் போது வழக்குகள் தேங்குவது குறையும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த வகையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதே இலக்கு: தொழில்முனைவோர் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!