ஆற்காடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் உட்பட 3 பேர் காயம்
2021-12-05@ 14:21:44

ஆற்காடு: ஆற்காடு அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமும் 6 பேர் காயமடைந்தனர். சென்னை கூடுவாஞ்சேரி அருேக நந்திவரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 59). அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று வேலூரில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு தடம் எண் 155 என்ற அரசு பஸ்சை ஓட்டி வந்தார். சென்னையைச் சேர்ந்த கேசவன் கண்டக்டராக இருந்தார். ஆற்காடு அடுத்த வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணிக்கு வந்தபோது அங்குள்ள வளைவில் திரும்பி முன்னால் சென்ற மண் லாரியை அரசு பஸ் முந்த முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கம் அரசு பஸ் மோதி சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியில் வேகமாக மோதியது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து டிரைவர் குமார் படுகாயமடைந்தார். மேலும் பயணிகள் சீதா(43), சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த கணேசன் (59) ஆகியோர் படுகாயமும், ஆம்பூர் வெங்கட சமுத்திரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (41), மாதனூரைச் சேர்ந்த விசித்திரா (25), நாட்டேரியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (49), வேலூர் அடுத்த அரியூர் பழவேரியைச் சேர்ந்த பிரேம்குமார் (24) ஆகிேயார் லேசான காயமும் அடைந்தனர். தகவலின்பேரில், போலீசார் சென்று அனைவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விருத்தாச்சலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசிய நபர்: கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!