பொன்பரப்பியில் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
2021-12-05@ 12:52:42

செந்துறை: அரியலூர் மாவட்டம் செந்துறை காவல்நிலையம் சார்பாக கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழுவை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, தலைமை காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மஞ்சுளா ஆகியோர் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரிடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்களை பகிர்ததோடு, அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு தொடர்பு எண்களையும் தெரிவித்து, பாலியல் குற்றங்களை தடுக்க உறுதிமொழியும் ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னபொண்ணு, கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, தொழிற்கல்வி ஆசிரியர் செங்குட்டுவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை ஆசிரியர் பஞ்சாபிகேசன் ஒருங்கிணைத்திருந்தார்.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்