பாஜவில் இணைந்த மாஜி அதிமுக எம்எல்ஏ - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: மீண்டும் தாய்க்கட்சியுடன் இணைந்தாரா?
2021-12-05@ 02:18:18

அலங்காநல்லூர்: அதிமுகவிலிருந்து பாஜவுக்கு தாவிய சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கும், ஓபிஎஸ்சை சந்தித்து பேசினார். இவர் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாணிக்கம். ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான இவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது. தேர்தலில் தோல்வி அடைந்ததால், கடந்த சில மாதங்களாக கட்சிப்பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். திடீரென கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பாஜவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே இந்நிலையில், அதிமுகவில் மீண்டும் இணைய மாணிக்கம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தை அண்மையில் மாணிக்கம் சந்தித்து பேசி உள்ளார். இதனால் அவர் மீண்டும் கட்சியில் இணைந்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணிக்கத்திடம் கேட்டபோது, ‘‘தற்போது பாஜவில் தான் நான் இருக்கிறேன். மரியாதை நிமித்தமாகவே ஓபிஎஸ்சை சந்தித்தேன். அதிமுகவும் - பாஜவும் ஒத்த கருத்துடன் தான் செயல்படுகிறது. கூட்டணியில் இருப்பதால், இரு கட்சிகளிலும் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன். அதிமுக - பாஜ கூட்டணியில் இருப்பதால், கட்சி மாறியதில் சிக்கல் இல்லை’’ என்றார்.
மேலும் செய்திகள்
முதலமைச்சரின் உரையை விமர்சிப்பது அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனம்” -சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்..!
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கான தேவைகளைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார்: அண்ணாமலை பேச்சுக்கு துரை வைகோ பதிலடி
சொல்லிட்டாங்க...
ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்
மாநிலங்களவை வேட்பாளர் யார்? சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
பிரதமரின் வருகையால் தமிழகத்துக்கு பல நன்மை கிடைக்கப்போகிறது: தமிழக பாஜ தலைவர் அறிக்கை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!