SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உதயநிதி படத்தில் வடிவேலு

2021-12-05@ 02:12:16

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். அவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதில் முக்கிய வேடத்தில் நடிக்க வடிவேலு தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். இந்நிலையில் அடுத்த படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்துவிட்டு துருவ் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்