கேரளாவில் 15 வயது மாணவிகளுக்கு தடுப்பூசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்.!
2021-12-04@ 17:30:22

திருவனந்தபுரம்: கேரளாவில் 10ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் நேற்று முன்தினம் 15 வயதில் போட வேண்டிய தடுப்பூசியை போடுவதற்காக ஆரியநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். இடம் தெரியாமல் தவறுதலாக மருத்துவமனையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு 2 மாணவிகளும் சென்றனர். அங்கிருந்த நர்ஸ் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். சிறிதுநேரம் கழித்து தான் தடுப்பூசி மாறி செலுத்திய விவரம் மாணவிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து 2 மாணவிகளையும் ஆஸ்பத்திரியில் அமர்த்தி டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்தனர். உடல் நலகுறைவு எதுவும் ஏற்படாததால் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்றதும் சிறிதுநேரத்தில் இருவருக்கும் காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் இருவரையும் அருகில் உள்ள உழமலைக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ெதாடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்ேறார் ஆரியநாடு போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையே திருவனந்தபுரம் மாவட்ட மருத்துவ அதிகாரி ஜோஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், நர்ஸ் ராஜி கவனக்குறைவால் மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டது தெரியவந்தது. இதையடுத்து நர்ஸ் ராஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் மாடல் அழகி தற்கொலை
8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை: தேவகவுடாவை சந்தித்த பின் சந்திரசேகர ராவ் புகார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!