பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு; தமிழக அரசு அறிவிப்பு
2021-12-04@ 14:40:50

சென்னை: நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம்.
மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப்பருப்பு 250 கிராம், உளுத்தம்பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று என 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை ரூ.2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில் மொத்தம் ரூ.1088 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 செலவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க, கரும்பு ஒன்றுக்கு ரூ.33 வீதம் (போக்குவரத்து செலவு உட்பட) மொத்தம் ரூ.71,10,85,980 செலவில் வழங்கலாம்.
கரும்பினை கொள்முதல் செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்மந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் உள்ளடக்கிய குழு அமைத்திட உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பான 20 பொருட்களில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் 10 கிராம் ஆகியவைகளை மட்டும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33%ஆக உயர்த்த நடவடிக்கை: வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்..!
தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!