ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சப்படாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: மக்களுக்கு ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்..!!
2021-12-04@ 12:44:14

சென்னை: ஒமிக்ரான் தொற்று குறித்து மக்கள் அச்சமடையாமல் அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 50,000 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தடுப்பூசி மட்டுமே மக்களை பாதுகாக்கக்கூடியது என்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். டெல்டா வைரஸே குறையாத நிலையில், புதிய வகை கொரோனா வந்திருப்பதால் மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என அறிவுறுத்திய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 86 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
கோளம்பாக்கம் அடுத்த படூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
போலி பல்கலை மூலம் ரூ.15 ஆயிரத்திற்கு டாக்டர் பட்டம் விற்பனை
இன்றைய இளைஞர்கள் நாட்டுப்புற கலைகளை கற்று மேல்நாடுகளுக்கு சென்று கலையினை வளர்க்க வேண்டும்; மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் வலியுறுத்தல்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!