வாகா வழியாக ஆப்கானுக்கு கோதுமை இந்திய லாரிகள் செல்ல பாகிஸ்தான் அனுமதி
2021-12-04@ 01:19:02

இஸ்லாமாபாத்: வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு உணவு, மருந்துப் பொருட்களை இந்தியா கொண்டு செல்ல பாகிஸ்தான் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை பிடித்த நிலையில், அங்கு கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு தானியங்கள், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலிபான்கள் ஆட்சியை பிடிக்கும் முன்பாகவே, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா இலவசமாக பல்வேறு உதவிகளை செய்து வந்தது.
தற்போதும், அதேபோல் உதவிகள் செய்ய முன்வந்துள்ளது. இதன்படி, 50 ஆயிரம் கடன் கோதுமை, மருந்துகளை லாரிகள் மூலமாக அனுப்ப முடிவு செய்துள்ளது. இவற்றை இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள வாகா வழியாக மட்டுமே அனுப்ப முடியும். எனவே, பாகிஸ்தான் வழியாக இந்த லாரிகள் செல்வதற்கு அனுமதிக்கும்படி பாகிஸ்தானுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது. ஆனால், பாகிஸ்தான் அதை நிராகரித்தது. இது தொடர்பாக அந்த நாட்டுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `மனிதாபிமான நோக்கங்களுக்காக, வாகா எல்லை வழியாக லாரிகளில் கோதுமை, உயிர் காக்கும் மருந்துகளை இந்தியா கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியது!!
இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மாஜி பிரதமர் மகிந்தாவிடம் போலீஸ் விசாரணை: எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு
சீனாவின் ஆதிக்கம், செல்வாக்கை ஒடுக்க ‘ஆசியாவுக்கு ஒரு நேட்டோ’ அமெரிக்காவின் பலே ராஜதந்திரம் இந்தியாவை வைத்து நடக்கும் நாடகம்
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் எதிரொலி மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை
இலங்கையில் பணவீக்கம் 35 சதவீதத்தை எட்டியது; ஒரு லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அச்சிட முடிவு.! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தகவல்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!