விவசாயிகள் இறப்பு கணக்கு இல்லை என்பது ஆணவம்: ராகுல் காந்தி கண்டனம்
2021-12-04@ 01:09:07

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது இறந்த விவசாயிகள் குறித்த கணக்கு இல்லை என்று ஒன்றிய அரசு கூறுவது அகந்தை செயல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான கடந்த புதனன்று டெல்லி போராட்ட களத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்தது மற்றும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வேளாண் அமைச்சகத்திடம் எந்த பதிவுகளும் இல்லை என்று தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் இந்த பதிலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி கூறுகையில், ‘‘ வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்தது குறித்து எந்த கணக்கும் இல்லை என்று கூறுவது ஒன்றிய அரசின் உணர்வற்ற மற்றும் அகந்தை செயலாகும். போராட்டத்தின்போது விவசாயிகள் இறந்ததற்கு பஞ்சாப் அரசு பொறுப்பில்லை. எனினும் உயிரிழந்த 403 விவசாயிகளுக்கு தலா ரூ.5லட்சம் நிதியுதவியை மாநில அரசு வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்துக்கு வெளியே இறந்த 100 விவசாயிகள், பொது அறிவிப்புகள் மூலமாக பெறப்பட்ட தகவலின்படி கிடைத்த 200 விவசாயிகளின் இறப்பு பட்டியலும் உள்ளது. திங்களன்று இந்த பட்டியல் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் பார்வைக்கு வைக்கப்படும்,” என்றார்.
மேலும் செய்திகள்
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!