மோடி வருகைக்கு முன்னதாக ஆளும் பாஜக அமைச்சர் காங்கிரசுக்கு ஓட்டம்?.. உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பு
2021-12-03@ 21:00:32

டேராடூன்: பிரதமர் மோடி வரும் சில நாட்களில் உத்தரகாண்ட் வரவுள்ள நிலையில், இம்மாநில ஆளும் பாஜக அமைச்சர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக பேசப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடப்பதால், அம்மாநிலத்தில் ஆளும் பாஜக பல்வேறு திட்டங்களை வேகவேகமாக தொடங்கி வைத்து வருகிறது. பிரதமர் மோடி வரும் சில நாட்களில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு செல்கிறார். இதற்கிடையே ஆளும் பாஜக அமைச்சர் ஹரக் சிங் ராவத், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால், உத்தரகாண்ட் அரசியலில் பரபரப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஹரக் சிங் ராவத் கூறுகையில், ‘எனக்கு எதிராக எனது அரசியல் எதிரிகள் சதி வேலைகளை செய்து வருகின்றனர். நான் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இதுபோன்ற வதந்திகள் மிகவும் அருவருப்பானதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளது’ என்றார்.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரிதம் சிங், அமைச்சர் ஹரக் சிங் ராவத்தை தனியாக சந்தித்தார். அதனால், இவர் காங்கிரசில் இணைய போவதாக வதந்திகள் பரப்பப்பட்டன. தேர்தல் நேரத்தில் ஆளும் பாஜக அமைச்சர், காங்கிரசில் சேரப் போவதாக கூறப்படும் ெசய்திகள் குறித்து மாநில காங்கிரஸ் தரப்பில் எவ்வித கருத்தும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!