ஒமிக்ரான் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விடை இல்லை; இதன் அறிகுறிகள் தீவிரத்தன்மை கொண்டது: WHO
2021-12-03@ 10:00:17

ஜெனிவா: தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்காததை தொடர்ந்து ஆய்வுகள் தேவை என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்காவில் தான் கடந்த மாதம் 24ம் தேதி முதல் முறையாக ஒமிக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போச்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகளும் தீவிர தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் ஜெனிவாவில் பேட்டியளித்தார். அப்போது கொரோனா வைரஸின் உருமாற்ற பிரிவான ஒமிக்ரான் வைரஸ் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் ஒமிக்ரானின் இந்த வளர்ச்சியை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து மிக தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட வானுயர்ந்த கட்டிடங்கள், நினைவு சின்னங்கள்..!!
முதன்முறையாக இந்தியாவின் பெண் எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது அறிவிப்பு: நாட்டின் பிரிவினை குறித்த புத்தகம்
போலி பாஸ்போர்ட் வழக்கில் இலங்கை மாஜி அமைச்சரின் மனைவிக்கு 2 ஆண்டு சிறை
துப்பாக்கி சூட்டில் 21 பேர் இறந்த சோகம் : ஆசிரியையின் கணவர் ‘ஹார்ட் அட்டாக்’கில் சாவு
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் மார்கோஸ் ஜூனியர் அடுத்த அதிபராக அறிவிப்பு!!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை!: புதிய நிதி உதவி வழங்க திட்டம் எதுவும் இல்லை என உலக வங்கி அறிவிப்பு..!!
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி