சித்திரை மாதத்தையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாட வேண்டும்: ஓபிஎஸ் வேண்டுகோள்
2021-12-03@ 00:05:27

சென்னை: சித்தரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை தொடர்ந்திட முதல்வர் நடவடிக்கை எடுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார். இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்புதான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டுகின்ற மரபு. இந்தநிலையில், 2022 பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே, முதல்வர், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடரவும், பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் தமிழ்ப்புத்தாண்டு என்ற வாசகத்தை நிறுத்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
ஆஷாக்களுக்கு கிடைத்த விருதால் இந்தியாவிற்கு பெருமை: ஜி.கே.வாசன் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலை இனி உயராது என்ற உறுதிமொழியே உண்மையான தீர்வை தரும்: ஒன்றிய அரசு நாடகமாடுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு
குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழகத்தில் 26, 27ம் தேதி ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக கூட்டாக அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50: ஒன்றிய அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை