சேரில் அமர்ந்து கொண்டு தேசிய கீதம் பாடிய மம்தா: மகாராஷ்டிராவில் சர்ச்சை
2021-12-03@ 00:04:32

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக மகாராஷ்டிரா சென்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். பிறகு நடந்த செய்தியாளர்களை சந்தித்தார். அதை முடிக்கும் தருவாயில், தேசிய கீதத்தை மம்தாவே இருக்கையில் அமர்ந்து கொண்டு சிலவரிகள் பாடினார். பின்னர் எழுந்து நின்று மேலும் சில வரிகளை மட்டும் பாடிவிட்டு, ‘ஜெய் மகாராஷ்டிரா’ என்று கூறி பாதியில் முடித்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா, நாட்டின் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. பாஜ தலைவர்கள் பலரும் அவரை கடுமையாக சாடியுள்ளனர். முதல்வர் மம்தாவிற்கு தேசிய கீதம் தெரியாதா? அல்லது வேண்டுமென்றே அவமதித்தாரா? என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தேசிய கீதத்தை மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாக மும்பை காவல் நிலையத்தில் பாஜ நிர்வாகி புகார் கொடுத்துள்ளார்.
Tags:
Mamata sits in chair and sings national anthem: Controversy in Maharashtra சேரில் அமர்ந்து தேசிய கீதம் பாடிய மம்தா மகாராஷ்டிரா சர்ச்சைமேலும் செய்திகள்
தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்