திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி
2021-12-02@ 00:50:46

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முகமையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி முகாம், மகளிர் திட்ட மேலாளர் சந்திரசேகர் தலைமையில் ஈக்காட்டில் உள்ள திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நா.ஜீவராணி, திருவள்ளூர் மாவட்ட விதைச்சான்று அலுவலர் தி.டெ.அபிலாஷா ஆகியோர் கலந்துக் கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விதை உற்பத்தியாளர் பயிற்சி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது. தரமான விதையின் முக்கியத்துவத்தை பற்றியும், விதைப்பண்ணைகளில் பிற ரக கலவன்கள் நீக்கப்பட்டு இனத்தூய்மை பராமரிக்கப்பட வேண்டும். நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை விதையாக உற்பத்தி செய்வதால் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் கிடைக்கும்.மேலும் விதைப்பண்ணை அமைத்து பதிவு செய்து, தேர்ந்தெடுக்கப்படும் வயல் விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய தகுந்த இடமாக இருக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகள்
இது கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசு: புதிய பள்ளி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மார்ச் 22, நவ.1ம் தேதி கூடுதல் கிராம சபை கூட்டங்கள்: அரசாணை வெளியீடு
சென்னை விமான நிலையத்தில் சுமார் 8 நிமிடங்கள் சந்திப்பு பிரதமரிடம் ஓபிஎஸ், இபிஎஸ் பேசியது என்ன?: பரபரப்பு தகவல்கள்
இதுவரை 2,600 கோடி மதிப்பு கோயில் சொத்துகள் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
குட்கா, பான்மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்த்தாள் தகுதி தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: தமிழக அரசு உத்தரவு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!