மாவட்ட அளவில் கருங்குழி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முதலிடம்
2021-12-02@ 00:36:38

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் சுமார் 14,000 பேர் வசிக்கின்றனர். இங்கு, திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல், தனிநபர் மற்றும் பொது கழிப்பறைகள் கட்டமைப்பது ஆகிய பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. இதனால் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் மாவட்ட அளவில் கருங்குழி பேரூராட்சி முதலிடம் பிடித்துள்ளது. இதையொட்டி, மத்திய குழு ஒன்றிய மற்றும் தமிழக அளவில் தரவரிசை மேற்கொள்கிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 468 பேரூராட்சிகளில் கருங்குழி பேரூராட்சி 7வது இடத்திலும், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் 17 பேரூராட்சிகளில் முதல் இடத்திலும் உள்ளது. மத்திய தர மதிப்பீட்டு குழு 3 மாதத்துக்கு ஒருமுறை, பேரூராட்சிகளில் உள்ள பொது மக்களிடம் கருத்து கேட்டு, நேரடி களஆய்வு நடத்தி அதன் ஆதாரங்களின்படி இந்த தர மதிப்பீடு வழங்குகிறது.
இதனால், இந்த பேரூராட்சிக்கு மேலும் பல அரசு திட்டப்பணிகள் கிடைக்க வாய்ப்புகள் உறுதியாகியுள்ளது. மேலும், கருங்குழி பேரூராட்சி, கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்களிடம் 100 சதவீத வரி வசூல் செய்து, ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் கூறுகையில், தமிழக அளவில் 7வது இடத்தையும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அளவில் முதலிடத்தையும் இந்த பேரூராட்சி பெறுவதற்கு நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு தந்த இப்பகுதி மக்களே காரணம் என்றார்.
மேலும் செய்திகள்
நான் ரொம்ப ஒரு ஆவரேஜான ஆக்டர்: படித்தில் நடிப்பது தொடர்பான கேள்வி அண்ணாமலை பதில்
காவல்துறை நம் நண்பன் என்று சொல்லும் வகையில் காவலர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கோரிக்கை
தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் முன்னிலையில் Pacedigitek என்ற நிறுவனத்துடன் முதன்மைச் சேவை ஒப்பந்தங்கள் கையெழுத்து
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33%ஆக உயர்த்த நடவடிக்கை: வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்..!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!