24 ஆண்டுகளுக்கு பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறப்பு..: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
2021-12-01@ 17:37:36

திருப்பூர்: 24 ஆண்டுகளுக்கு பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை அமைந்துள்ளது.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ( பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுவதுடன், உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை ஒன்றியம், குடிமங்கலம் ஒன்றியப் பகுதியிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில் 58.00 அடியாக உயர்ந்த நிலையில் , அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,145 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பிஏபி 4 ம் மண்டலத்திற்கு பிரதான கால்வாய், உடுமலை கால்வாய், குடிநீர் என வினாடிக்கு 1010 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் திருமூர்த்திமலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக , அணை நிரம்பியதையடுத்து பாலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டு பாலாற்றின் வழியோர கிராமங்களுக்கும் , கேரளா மாநிலம் சித்தூர், ஒலவங்கோடு உள்ளிட்ட வழியோர மக்களுக்கும் பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 5 ம் தேதி நிரம்பியது. அதன் பிறகு 24 ஆண்டுகளாக நிரம்பவில்லை. கடந்த 5 ,26 , 28ம் தேதிகளில் நிரம்பிய நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் நீர்வரத்து குறைந்தததால் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை