ஆம்பூர் அருகே மலட்டாற்று தரைப்பாலத்தில் 80 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய 2 பஸ்கள்: கயிறு கட்டி டிராக்டர் உதவியுடன் மீட்டனர்
2021-12-01@ 15:13:03

ஆம்பூர்: ஆம்பூர் அருகே மலட்டாற்றில் சிக்கிய 2 தனியார் பஸ்கள் டிராக்டர் உதவியுடன் மீட்கப்பட்டது. இதில் பயணித்த 80 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்ல நரியம்பட்டு, மேல்பட்டி வழியாக ஒரு சாலையும், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாறு தரைப்பாலம், மாதனூர் பாலாற்று தரைப்பாலம் ஆகியவை வழியாக செல்லும் சாலைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தொடர் மழை காரணமாக நரியம்பட்டு மலட்டாற்றில் உள்ள தரைப்பாலம், பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலம் ஆகியவை வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாதனூர் தரைப்பாலம் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அப்பகுதியில் அடியோடு போக்குவரத்து நின்றது. இதனால், குடியாத்தம் செல்லும் வாகனங்கள் பேரணாம்பட்டு அல்லது பள்ளிகொண்டா வழியாக சுமார் 30 கி.மீ தூரம் சுற்றி குடியாத்தம் செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மலட்டாற்றில் வெள்ளம் குறைந்த நிலையில் நேற்று காலை ஆம்பூர், குடியாத்தம் ஆகிய இரு மார்க்கத்தில் நரியம்பட்டு மலட்டாற்று வழியாக தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் குடியாத்தத்தில் இருந்து வந்த ஒரு தனியார் பஸ் மலட்டாற்றில் திடீரென அதிகரித்த வெள்ளத்தில் சிக்கி தரைப்பாலத்தின் நடுவே நின்றது. இதனால் பஸ்சில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சமடைந்தனர். உடனே பலர் ஆற்றில் இறங்கி வெள்ளத்தில் நடந்து சென்று தரைப்பாலத்தை கடந்தனர். இதை கண்ட அங்கிருந்த மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோர் உடனடியாக அங்கு டிராக்டரை கொண்டு வந்தனர்.
பஸ்சை டிராக்டரில் கட்டி இழுத்து மலட்டாற்று வெள்ளத்தில் இருந்து மீட்டனர். இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதேபோல் ஆம்பூரில் இருந்து வந்த ஒரு தனியார் பஸ்சும் மலட்டாற்று வெள்ளத்தில் சுமார் 40 பயணிகளுடன் சிக்கியது. அந்த பஸ்சும் டிராக்டரில் கட்டி இழுத்து ஆற்றில் இருந்து கரைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், இரு பஸ்களில் பயணித்த சுமார் 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மலட்டாற்றில் வெள்ளம் குறையும் வரை வாகனங்களை இயக்க தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் தினமும் இருமுறை இயக்கம்
கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
விழுப்புரத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் விவசாய நிலம் சேதம்
அழகர்கோவில் பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்
பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல் : தொழிலாளிக்கு வலை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை