12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்க!: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்..!!
2021-12-01@ 12:05:11

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேரின் சஸ்பெண்டை கண்டித்தும், உத்தரவை ரத்து செய்யக்கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்ததாவது, இன்று திரிணாமுல் உள்ளிட்ட 16 கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
12 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்கட்சிகளிடம் பிளவு ஏற்பட்டது போன்ற செய்திகளை பாஜக பரப்புகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரச்சனைகளின் அடிப்படையில் ஒன்றுபட்டு நிற்கிறோம். அனைவருடனும் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்று தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகா அர்ஜுனா கார்கே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பஞ்சாப் மாநில மாஜி காங். தலைவர் பாஜ.வுக்கு தாவினார்
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரனுக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்
34 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சித்துவுக்கு ஓராண்டு சிறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு விழா: மேடையில் தவறி விழுந்த உளவுத் துறை டிஎஸ்பி சாவு
ஞானவாபி மசூதி வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது: வாரணாசி நீதிமன்றத்துக்கு கட்டுப்பாடு
செக் மோசடியை விசாரிக்க 5 மாநிலங்களில் நீதிமன்றம்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!