ஒன்றிய அரசிடம் புகார் அளிப்போம் இரவில் நீர் திறந்ததால் மக்கள் அவதி: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
2021-12-01@ 00:33:25

திருவனந்தபுரம்: ‘முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இரவில் திடீரென தண்ணீர் திறந்து விட்டது பற்றி ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் புகார் செய்யப்படும்,’ என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறினார்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், திடீரென நள்ளிரவு நேரத்தில் திறக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இரவில் தண்ணீர் திறந்து விட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். இது தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் மற்றும் முல்லை பெரியாறு மேற்பார்வைக் குழு தலைவரிடம் புகார் செய்யப்படும். இது குறித்து தமிழக அரசிடமும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
* ‘தண்ணீர் வெடிகுண்டு’
இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டத்தில் நேற்று நடந்த விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பின் போராட்டத்தில் கேரள முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ.வுமான எம்.எம்.மணி பேசுகையில், ‘‘முல்லை பெரியாறு அணையின் பல இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு மேல் கம்பியையும், சிமென்டையும் வைத்து பூசினால் எப்படி உறுதியாக இருக்கும்? ஒரு தண்ணீர் வெடிகுண்டு போல் இந்த அணை நிற்கிறது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்,’’ என்றார்.
Tags:
Complaint to the Union Government Water at night People's suffering Kerala Minister accused ஒன்றிய அரசிடம் புகார் இரவில் நீர் மக்கள் அவதி கேரள அமைச்சர் குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
வாடிக்கையாளராக நடித்த போலீஸ்காரரிடம் கேள்வி 11 பெண்களில் யார் உங்களுக்கு வேணும்?: மசாஜ் சென்டர் நிர்வாகி உட்பட 12 பேர் கைது
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உதவியுடன் ரயில் தண்டவாளங்களை தகர்க்க சதி திட்டம்: மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த மதுவை போட்டிபோட்டு அள்ளிச்சென்ற குடிமகன்கள்: உறவினர்கள், நண்பர்களையும் வரவழைத்து உற்சாகம்
சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்; சிறப்பு உரிமை குழு முன் பெண் எம்பி ஆஜர்.! சபாநாயகரின் அனுமதியை தொடர்ந்து நடவடிக்கை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை