மழை வெள்ளத்தால் பாதிப்பு பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
2021-12-01@ 00:32:34

திருவள்ளூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வெள்ளநிவாரண பொருட்கள், உணவு ஆகியவை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் தொகுதி, வெங்கத்தூர் ஊராட்சி வெங்கத்தூர் கண்டிகையில் மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே.திராவிடபக்தன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைத் தலைவர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், ஊராட்சி துணைத் தலைவருமான ஆர்.மோகனசுந்தரம், கொப்பூர் டி.திலீப்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துக் கொண்டு, பழங்குடியின மக்களுக்கு மழை வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், செங்குட்டுவன், தா.குமார், ஏ.எஸ்.மணி, கடம்பத்தூர் வி.ராஜசேகர், வழக்கறிஞர் பி.கே.நாகராஜ், தாடி நந்தகோபால், ஆர்.ராஜேந்திரகுமார், சி.ஆர்.குமரன், காஞ்சிப்பாடி சரவணன், அஸ்வின்காந்த், கிளை நிர்வாகிகள் டி.ஆனந்த், டில்லி, ராமதாஸ், ராயப்பன், பஞ்சாட்சரம், அருண், எல்லப்பன், டி.வி.முருகன், வாசு, ஆர்.கார்த்திக், குமார், முத்து, கோபி, ராஜேஷ், ரமேஷ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
Tags:
Rain floods relief items for tribal people VG Rajendran MLA மழை வெள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏமேலும் செய்திகள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!