SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2021-11-30@ 12:12:53

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2021) தலைமைச் செயலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் 2007-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய துணை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களால் 2009ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு சென்னை பெருநகர மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில், பொதுப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்துகளின் ஒருங்கிணைந்த இயக்கத்தினை (Multi Modal Integration) உறுதி செய்யும் வகையில், மெட்ரோ இரயில் பயணிகள் சிரமமின்றி, விரைவாக பயணம் மேற்கொள்ள தனி வண்ணத்தில் 12 இணைப்பு சிற்றுந்துகள் வாயிலாக தினசரி 148 நடைகள் இயக்கப்படும். அதன் விவரங்கள் பின்வருமாறு:

வழித்தட எண்----புறப்படும் இடம்----சேருமிடம்----இயக்கப்படும் சிற்றுந்துகள் எண்ணிக்கை----நடைகள்

S82----ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம்----மடிப்பாக்கம் பேருந்து நிலையம்----2----28    
S84----ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம்----போரூர்----2----28    
S69----ஏர்போர்ட் மெட்ரோ இரயில் நிலையம்----குன்றத்தூர்----2----20    
S56----திருவொற்றியூர் பேருந்து நிலையம்----மணலி----2----24    
S60----கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ இரயில் நிலையம்----மதுரவாயல் ஏரிக்கரை----2----24    
S51----கோயம்பேடு பேருந்து நிலைய மெட்ரோ இரயில் நிலையம்----நொளம்பூர் சக்தி நகர்----2----24    

                        மொத்தம்---- 12----148    

இதேபோன்று, மற்ற அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழக இணைப்புச் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர்  டாக்டர்.கே.கோபால், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்