SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியது!!

2021-11-30@ 08:03:15

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.23 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,23,31,631 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,68,65,753 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 லட்சத்து 23 ஆயிரத்து 984 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,02,41,894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84,328 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 4,92,67,877,   உயிரிழப்பு -8,01,049,    குணமடைந்தோர் - 3,90,01,529
இந்தியா        -  பாதிப்பு - 3,45,83,597,  உயிரிழப்பு -  4,68,790,   குணமடைந்தோர் - 3,40,08,183
பிரேசில்        -  பாதிப்பு - 2,20,84,749,  உயிரிழப்பு -  6,14,428,  குணமடைந்தோர் - 2,13,04,115
இங்கிலாந்து- பாதிப்பு -  1,01,89,059,  உயிரிழப்பு -  1,44,810,  குணமடைந்தோர் -  90,25,773
ரஷ்யா           -  பாதிப்பு -   96,04,233,   உயிரிழப்பு -  2,73,964,   குணமடைந்தோர் -   82,95,811     

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி        - 87,70,372
பிரான்ஸ்     -  76,28,327
ஈரான்          - 61,13,192
ஜெர்மனி         - 58,25,543
அர்ஜெண்டினா- 53,28,416
ஸ்பெயின்       - 51,53,923
கொலம்பியா -  50,67,348
இத்தாலி          - 50,15,790
இந்தோனேசியா- 42,56,112
மெக்சிகோ     - 38,83,842

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்