தமிழக அரசுக்கு திருமாவளவன் பாராட்டு
2021-11-30@ 00:09:50

அரியலூர்: மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என திருமாவளவன் தெரிவித்தார். அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று அளித்த பேட்டி: தொடர் மழையினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழக முதல்வரே நேரிடையாக களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
வரும் காலங்களில் இதுபோன்று சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் தனியாக ஒரு ஆணையம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு, விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!