பாஸ்போர்ட் விசாரணைக்கு 500 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 2 ஆண்டு சிறை: திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
2021-11-30@ 00:09:29

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், வெளிநாடு செல்ல கடந்த 2006ல் பாஸ்போர்ட் விண்ணப்பித்தார். பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு விண்ணப்பித்தவரின் விவரங்களை சேகரித்து (என்ஓசி) தடை இல்லா சான்று அனுப்ப கோரி உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த அப்போதைய ஏட்டு ரவி என்பவர் விண்ணப்பதாரரிடம் விசாரணை நடத்தியதோடு, ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி பணத்தை கொடுத்தபோது, லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ரவியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கார்த்திகேயன் வழக்கை விசாரித்து, ஏட்டு ரவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
மேலும் செய்திகள்
செய்வினை வைத்து மாட்டை கொன்றதாக அண்ணன் கொலை: தலைமறைவான தம்பியை தேடும் போலீஸ்
ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி: ஈரோடு அருகே பரபரப்பு
கணவருடன் சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன்: தடுக்க முயன்ற அண்ணனும் பலி
ஆற்காடு அருகே கணவருடன் பைக்கில் சென்ற ஆசிரியையின் தாலி பறிப்பு: மர்ம ஆசாமிகளுக்கு வலை
ரவுடிகள் ஐந்து பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
செங்குன்றம் அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ் 1 மாணவியை கடத்தி கோயிலில் திருமணம் ஊர் ஊராக அழைத்து சென்று செக்ஸ் டார்ச்சர்; காதல் கணவன் கைது: திடுக் தகவலால் பரபரப்பு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை