கழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டால் புகார் அளிக்கலாம்: தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணைய தலைவர் தகவல்
2021-11-30@ 00:09:26

சென்னை: தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் முன்னிலையில் களப்பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக தாட்கோ மூலம் 9 பயனாளிகளுக்கு பருவக் கடனாக ரூ.40,56,300க்கான காசோலையினை ஆணையத் தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.
பின்னர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘கழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி யாராவது மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக தேசிய உதவி எண் 14420 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார். ஆய்வுக் கூட்டத்தில் சென்னைக் குடிநீர் வாரிய செயல் இயக்குநர் ஆகாஷ், பொறியியல் இயக்குநர் மதுரைநாயகம் , நிதி இயக்குநர் முத்துகுமாரசாமி, பொது மேலாளர் ராஜகிருபாகரன், தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து
படத்தில் அரசியல் வசனங்கள் இயக்குனரிடம் அஜித் மறுப்பு
டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதி
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.53 கோடியில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்: துணை மேயர் தகவல்
திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்
கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு திருமண விழாவிற்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை