தமிழகத்தில் ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்; ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
2021-11-30@ 00:02:31

சென்னை: தமிழகத்தில் ஜவுளி தொழிலை பாதுகாக்கவும், வேலை இழப்பை தடுக்கும் வகையில் பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது. இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2வது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும். 2021-22ம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவு திட்டத்தில் 5% அடிப்படை சுங்க வரி, 5% விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூகநல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11% ஆக உயர்ந்ததே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருதுகிறேன். எனவே, ஜவுளி தொழிலை பாதுகாக்கவும், வேலை இழப்பை தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டு பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
1 ஊக வணிகத்தை தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.
2 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.
3 உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
Tags:
Tamil Nadu textile industry protection cotton 11 percent import tax Chief Minister MK Stalin's letter தமிழகத்தில் ஜவுளி தொழிலை பாதுகாக்கும் பருத்தி 11 சதவீத இறக்குமதி வரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்மேலும் செய்திகள்
திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
எருமை அபிவிருத்தி மையம் கட்டப்படும் இடத்தில் கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கிவைக்கிறார்
சென்னை கோயம்பேடு அருகே வி.ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
ஜப்பானில் இபராக்கி மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.24க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தகவல்
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்குக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
களக்காடு அருகே சிங்கி குளத்தில் சமையல் தொழிலாளி மர்மமான முறையில் மரணம்
திருத்துறைப்பூண்டி அருகே கழுவங்காடு கிராமத்தில் தனலட்சுமி என்பவர் அடித்து கொலை : போலிஸ் விசாரணை
சமையல் எரிவாயுக்கான மானியத்தை ஒன்றிய அரசு அனைவருக்கும் வழங்க வேண்டும்: பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பெட்ரோல் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு மேலும் குறைக்க வேண்டும்:தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
ராஜபாளையம் அருகே பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் 6 நாட்கள் வேலைநிறுத்தம்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக சரிவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்