மாநிலங்களவை தேர்தலில் வெற்றி 3 திமுக எம்பிக்கள் பதவியேற்பு: வெங்கய்யா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
2021-11-30@ 00:01:56

சென்னை: திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்பிக்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் தங்கள் மாநிலங்களவை எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த பதவிக்கான தேர்தலை அக்டோபர் 4ம் தேதி நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், முகமது அப்துல்லா ஆகிய 3 பேரும் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியிட்டனர். இவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என தமிழக சட்டப் பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் கடந்த செப்டம்பர் 29ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்துக்கு முன்பாக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின் 3 மாநிலங்களவை உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் போது, திமுக எம்பிக்கள் 3 பேரும், தமிழில் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
State level election victory 3 DMK MPs inauguration மாநிலங்களவை தேர்தல் வெற்றி 3 திமுக எம்பிக்கள் பதவியேற்புமேலும் செய்திகள்
திராவிட மாடல் ஆட்சியே ஓராண்டு சாதனை : திண்டுக்கல் லியோனி பேச்சு
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!
மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
சொல்லிட்டாங்க...
முதல்வருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் தனியாக சந்திப்பு: தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்
மெகா கூட்டம் முடிஞ்சதும் பெரிய விக்கெட் காலி வெளியேறினார் ஹர்திக்: போன் பேசுறாங்க... சிக்கன் சாண்ட்விச் சாப்பிடுறாங்க... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!