13வது மாடியில் இளம்பெண் பலாத்கார கொலை: கல்லூரி மாணவர் உட்பட இருவர் கைது
2021-11-29@ 12:27:21

குர்லா: குர்லா அருகே 13வது மாடியின் மொட்டை மாடியில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கல்லூரி மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் குர்லா அடுத்த எச்.டி.ஐ.எல் காலனியில் பயன்படுத்தாத 13 மாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்ட வி.பி.நகர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் டிசிபி பிரணய் அசோக் கூறுகையில், ‘குர்லா வெஸ்டில் உள்ள காலனியின் ‘சி’ பிரிவில் உள்ள கட்டிட எண்: 16-இன் மொட்டை மாடியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சடலம் மீட்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மொட்டை மாடிக்கு வீடியோ எடுக்க சென்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. அந்த பெண் யார் என்பது குறித்து முழு விபரம் தெரியவில்லை. அவரை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்.
இந்த அடுக்குமாடி கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாகவே காலியாக உள்ளது. சி.சி.டி.வி எதுவும் இல்லை; வாட்ச்மேன்களும் இல்லை. சமீபத்தில் மாயமான பெண் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் முதலாம் ஆண்டு பி.காம் படிக்கும் மாணவர் உட்பட இருவரை கைது செய்துள்ளோம். கொலையான பெண், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதி உள்ளார். அதனால் கல்லூரி மாணவருடன் சேர்ந்து இருவரும், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். அடுக்குமாடி கட்டிடம் காலியாக இருந்ததால், இந்த கட்டிடத்தில் சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.
மேலும் செய்திகள்
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!