அன்றாடம் பயன்படுத்தும் பிஸ்கட், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களின் விலை 4% முதல் 33% வரை விலை உயர்கிறது!!
2021-11-29@ 09:20:23

டெல்லி : அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு முதல் பற்பசை வரை பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்க உள்ளது. எரிபொருள் முதல் சமையல் எரிவாயு வரை விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வது சாமானியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தப்படும் நுகர்பொருட்களை தயாரிக்கக் கூடிய ஐடிசி ஹிந்துஸ்தான் யூனி லிவர், பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான விலையை 4% முதல் 33 % வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. எரிபொருள் விலை மட்டுமின்றி மூலப் பொருட்கள் விலை உயர்வும் விலை ஏற்றதை தவிர்க்க இயலாததாக இருப்பதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
எந்ததெந்த பொருட்கள் எவ்வளவு விலை அதிகரிப்பு என்பதை காணலாம்
ஹிந்துஸ்தான் யூனி லிவர் தயாரிக்கும் டவ் சோப்புகள், ஷாம்புகள் மற்றும் பெர்சனல் கேர் பொருட்களின் விலை வரும் வாரங்களில் 12% வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் 2வது முறையாக இந்நிறுவனம் விலை ஏற்றத்தை மேற்கொள்கிறது. அதே போல் ரின் சோப்புகள் விலையை 5% உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் லக்ஸ் சோப்பு, ஷாம்புக்களின் விலையை 10%க்கு மேல் உயர்த்துகிறது. 19 மில்லி அளவு கொண்ட கம்போர்ட் கண்டிஷனர் விலை 33% வரை உயர்த்தப்பட்டுள்ளது. பார்லிஜி நிறுவனம் 3 மாதங்களில் 15% வரை பிஸ்கட் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் 20% வரை உயர்த்த முடிவு எடுத்துள்ளது.
டைகர், குட் டே, மில்க் பிக்கீஸ் உள்ளிட்ட பிஸ்கட்டுகளை தயாரிக்கும் பிரிட்டானியா நிறுவனம் 3 மாதங்களுக்குள் 7.5% அதற்கு பிறகு 10% விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. ஐடிசி நிறுவனம் பெர்பியும்கள் விலை 7% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. விவில் சோப்பு விலை 9% உயர்த்த உள்ளது ஐடிசி நிறுவனம்.
மேலும் பல நிறுவனங்கள், நொறுக்கு தீனிகள், தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள் விலையை உயர்த்த முடிவு எடுத்துள்ளன.
Tags:
சோப்புமேலும் செய்திகள்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
5,300 கோடிக்கு சொத்து ஹெட்டிரோ தலைவர் சாரதி இந்தியாவின் பணக்கார எம்பி: சொந்தமாக கார் மட்டும் இல்லை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!