திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக டிக்கெட்
2021-11-29@ 02:16:51

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு தினமும் காலசந்தி, உச்சிகாலம், சாய்ரட்சை என மூன்று கால பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்கள், ரூ.1500 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று, கலந்துகொள்ளலாம். அதிகபட்சமாக ஒருகால பூஜைக்கு 1520 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், கொரோனாவால் கடந்த மார்ச் 10ம் தேதியுடன் கட்டண அபிஷேகம் நிறுத்தப்பட்டது. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் அபிஷேகங்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், முருகன் கோயிலில் கட்டண அபிஷேகம் செய்வதற்கு இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று முன்தினம் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து, 7 மாதங்களுக்கு பின் திருத்தணி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் உச்சிகால பூஜைக்கு பக்தர்கள் கட்டண அபிஷேகத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஒரு கால அபிஷேகத்திற்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு டிக்கெட்டுக்கு இருவர் வீதம் மொத்தம் 10 பக்தர்கள் மட்டும் மூலவருக்கு நடத்தப்படும் பஞ்சாமிர்த அபிஷேகத்தை அமர்ந்து பார்ப்பதற்கு கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது. இந்த கட்டண அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் www.tirutanigaimurugan.tnhrce.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
செலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்
ஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!