பெரியபாளையம், பள்ளிப்பட்டு பகுதிகளில் 1300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது: விவசாயிகள் வேதனை; நிவாரணம் வழங்க கோரிக்கை
2021-11-29@ 02:10:40

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அத்திவாக்கம், கிளாம்பாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி விட்டது. மேலும், நேற்று முன்தினம் மற்றும் நேற்று முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் அத்திவாக்கம், கிளாம்பாக்கம், ஜெயபுரம், ஆலப்பாக்கம் ஆகிய கிராம சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிழைப்பு தேடி வேலைக்கு செல்ல முட்டியளவு தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, `அத்திவாக்கம், கிளாம்பாக்கம், ஆலப்பாக்கம் கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் செய்துள்ளோம். இந்த நெற்பயிர் நடவு நடப்பட்டு 50 நாட்கள் ஆகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் எங்களின் நெல் பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி விட்டது. மழைநீர் வடிவதற்கும் வழியில்லை. பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. மேலும், இந்த மழையால் அத்திவாக்கம், ஜெயபுரம் கிராம சாலையில் முட்டியளவு மழைநீரில் வேலைக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்தந்த கிராமங்களில் உள்ள ஏரிக்கு செல்லும் கால்வாய்களை சீரமைக்காததே. எனவே, பொதுப்பணித்துறையினர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.
பள்ளிப்பட்டு: திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டங்களில் விவசாயிகள் அதிக அளவில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கனமழை காரணமாக விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்ததால் நெற்பயிர் முற்றிலும் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் தாமனேரி, வீரமங்கலம், பாலாபுரம், ரங்காபுரம், வெடியங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முற்றிலும் மூழ்கி சேதமடைந்துள்ளது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் தினமும் இருமுறை இயக்கம்
கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
விழுப்புரத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் விவசாய நிலம் சேதம்
அழகர்கோவில் பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்
பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல் : தொழிலாளிக்கு வலை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை