செம்பு சொம்புக்கு ‘சிவப்பு சல்பர்’ பூச்சு யுடியூப் பார்த்து ரைஸ் புல்லிங் மோசடி: திருப்பதியில் 4 பேர் கைது
2021-11-29@ 01:21:04

திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள அலிபிரி காவல் நிலையத்தில் டிஎஸ்பி முரளிகிருஷ்ணா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதீத சக்தி வாய்ந்த ரைஸ் புல்லிங் பாத்திரம் எனக்கூறி ரூ.1.60 லட்சம் பணம் பெற்று கொண்டு சிலர் ஏமாற்றியதாகவும், செப்பு பாத்திரத்தை கொடுத்து ஏமாற்றியதை உணர்ந்து கொடுத்த பணத்தை திருப்பிச் தருமாறு பலமுறை கேட்டும் தராததால் பாதிக்கப்பட்ட குண்டூரை சேர்ந்த ஷேக் யாசின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் திருப்பதியில் உள்ள சுப்பா காலனி, முதல் கிராஸ் அருகே போலீசார் ரோந்து சென்ற போது 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயன்றனர்.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், ரைஸ் புல்லிங் பாத்திரம் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி வந்ததாக தெரிவித்தனர். மேலும் யுடியூப் பார்த்து சிவப்பு சல்பர் என்ற ரசாயனம் பூசிய கருப்பு பாத்திரத்திற்கு அதீதசக்தி இருப்பதாக கூறி அதை குண்டூரைச் சேர்ந்த வியபாரியிடம் கொடுத்து ஏமாற்றி ரூ.1.60 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து மதனப்பள்ளியை சேர்ந்த ஹேமந்த் குமார்(28), திருப்பதியை சேர்ந்த மனோஜ்குமார்(34), விஜயகுமார்(44), நாகராஜ்(34) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1.54 லட்சம் ரொக்கம், 1 கருப்பு செம்பு பாத்திரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்றார்.
மேலும் செய்திகள்
காதல் மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த மாமியார்: குழவிக் கல்லை போட்டு கொன்ற மருமகன் கைது
கோயம்பேட்டில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் தகராறு வாலிபருக்கு தலையில் கத்தி வெட்டு; நண்பர் கைது
புளியந்தோப்பில் கோயிலை உடைத்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது
வெளிநாடு கடத்த இருந்த ரூ.2 கோடி உலோக சிலைகள் மீட்பு-மயிலாடுதுறை அருகே ஒருவர் கைது
ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற 45 வயதான மீனவ பெண் பலாத்காரம் செய்து, எரித்து கொலை : ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது!!
அரக்கோணம் அருகே சடலமாக மீட்பு காஞ்சிபுரம் தம்பதியை கொன்ற உறவினர் உட்பட 3 பேர் கைது: சூனியம் வைத்ததாக கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி