SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விற்ற தாய்: பணத்தை பறிகொடுத்ததால் போலீசில் புகார்

2021-11-29@ 01:01:17

சென்னை: புழல் காவாங்கரை கே.எஸ்.நகர் 6வது தெருவை சேர்ந்தவர் யாஸ்மின் (28). இவருக்கு மோகன் என்பவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஷர்மிளா (10) என்ற பெண் குழந்தை உள்ளது. யாஸ்மின், 2வது முறையாக 5 மாதம் கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் மோகன், அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால், குடும்பம் நடத்த வருவாயின்றி யாஸ்மின் தவித்து வந்தார். மேலும், இவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் சிகிச்சைக்காக கெல்லீசில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, பழக்கமான எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெயகீதா என்பவரிடம், தனது கருவை கலைக்க ஆலோசனை கேட்டுள்ளார்.

 அதற்கு ஜெயகீதா, வயிற்றில் உள்ள குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை அதிக பணத்திற்கு விற்று தருவதாக உறுதியளித்துள்ளார். இதையடுத்து, ஜெயகீதா அரவணைப்பில் கடந்த 21ம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யாஸ்மின் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர், 24ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன யாஸ்மின், பிறந்து 5 நாட்கள் ஆன ஆண் குழந்தை மற்றும் மூத்த மகள் ஷர்மிளா ஆகியோரை ஜெயகீதா நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல கடை அருகில் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு, ஜெயகீதாவுக்கு அறிமுகமான எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தனம் என்பவர் அழைத்து வந்த நபர்கள் யாஸ்மினியிடம் வெற்று முத்திரை தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு, ஆண் குழந்தையை வாங்கிச்சென்றனர். அப்போது யாஸ்மினிடம், ஜெயகீதா ஒரு கவரில் ரூ.2.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.
பின்னர் யாஸ்மின் பணத்துடன் வீட்டிற்கு செல்ல ஆட்டோ மூலம் புளியந்தோப்பு ஆட்டுதொட்டி அருகில் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், யாஸ்மின் கையிலிருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் யாஸ்மின் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை விற்பனை செய்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்