எஸ்சி, எஸ்டி மாணவர்களின் படிப்பு உதவித்தொகை உயர்வு: தமிழக அரசுக்கு திருமாவளவன் நன்றி
2021-11-29@ 00:02:26

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு இதற்கு முன்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக அது மாற்றப்படாமலேயே இருந்தது. தற்போது ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கான உதவித்தொகையும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. படிப்பு உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1200 இல் இருந்து 1600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்வி அதிகமாகப் பெறும் மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இவற்றைச் செய்திருக்கும் முதலமைச்சருக்கு விசிக சார்பில் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Tags:
SC SD Student Scholarship Promotion Government of Tamil Nadu Thirumavalavan Thank you எஸ்சி எஸ்டி மாணவர் படிப்பு உதவித்தொகை உயர்வு தமிழக அரசு திருமாவளவன் நன்றிமேலும் செய்திகள்
விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது: அண்ணாமலை பேட்டி
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
தமிழகத்தில் மதுவிலக்கு: ராமதாஸ் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்