மழையால் மக்கள் வாழ்வாதாரம் இழப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 நிவாரணம்: தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
2021-11-29@ 00:02:18

சென்னை: மழையால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 24 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீராலும், தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாகவும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல், வருவாயின்றி தவித்து வரும் மக்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வெள்ள நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Due to the rain people's livelihood family card holder Rs.10 000 relief Government of Tamil Nadu Muslim League மழையால் மக்கள் வாழ்வாதாரம் குடும்ப அட்டைதாரர் ரூ.10 000 நிவாரணம் தமிழக அரசு முஸ்லிம் லீக்மேலும் செய்திகள்
ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு
சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
31 வது நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங். கட்சியினர் மலர் அஞ்சலி
சொல்லிட்டாங்க...
மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்