உடுமலை-ஆனைமலை சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர்: வடிகால் வசதி செய்து தர கோரிக்கை
2021-11-28@ 14:03:04

உடுமலை: உடுமலையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மாற்று வழி பாதையான உடுமலை- ஆனைமலை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ் வழித்தடத்தில் உள்ள கரட்டுமடம் பகுதியில் சாலையோர வடிகால் வசதி இல்லாததால் பருவமழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நீடித்த கனமழை காரணமாக கரட்டுமடம் சாலை தெப்பம் போல உருமாறியது. சாலையில் தேங்கிய தண்ணீர் அருகில் இருந்த குடிசைகளுக்கு புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கரட்டுமடம் பகுதியில் சாலையோர வடிகால் வசதி செய்து கொடுத்தால் மலை காலங்களின்போது சாலைகளில் தண்ணீர் தேங்காது. தொடர் மழையால் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாவது உடன் துர்நாற்றம் வீசி வருவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் நீடிப்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இனி வரும் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!