சபரிமலை, கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2021-11-28@ 01:29:34

சென்னை: சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக்கொண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக்கொண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி சம்மந்தப்பட்ட ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி-7, 10, 12, 14ம் தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து டிசம்பர்-5, 12, 19, 26, ஜனவரி-2, 9, 11, 13, 16ம் தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடையும். இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து வரும் டிசம்பர் 23ம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் மற்றொரு ரயில் நாகர்கோயிலுக்கு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும். 24ம் தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். வரும் 26ம் தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இங்கிருந்து 27ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags:
Sabarimala Christmas jam to avoid three special trains movement சபரிமலை கிறிஸ்துமஸ் நெரிசலை தவிர்க்க மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்மேலும் செய்திகள்
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்
தமிழகத்தில் 16 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 42 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
மருத்துவ பயன்பாட்டுக்கு மாநகராட்சி நிலம் : சென்னை மேயர் பிரியா தகவல்
480 பேருக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்படும்: அமைச்சர் அன்பரசன் தகவல்
பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!